வெளிவரவிருக்கும் நான்கு பருவ காலங்களில் நடக்கக்கூடிய ஒரு காதல் கதை
சமீபகாலத்தில் எந்த ஒரு பெரிய பெயரும் இல்லாமலேயே மிகப் பெரிய கவன ஈர்ப்பை உருவாக்கிய படமென்றால் அது காலங்களில் அவள் வசந்தம் என்று உறுதியாகச் சொல்லலாம். எங்கு பார்த்தாலும் பட்டாம்பூச்சியின் சிறகுகளோடு நாயகன் காதலியை அணைத்தபடி போஸ் கொடுக்கிறார். போவோர் வருவோரை திருப்பிப் பார்க்க வைக்கும் அழுத்தமான டிசைன்கள், அப்படி என்ன தான் இருக்கிறது இந்தப் படத்தில்? ஏன் இத்தகைய எதிர்பார்ப்பு என்று விசாரித்தால் சுவாரஸ்யமான தகவல்கள் வந்து விழுகின்றன.
நான்கு பருவ காலங்களில் நடக்கக்கூடிய ஒரு ரொமாண்டிக்கான காதல் கதை.
சினிமாக் காதலனான ஹீரோ செய்யும் காமெடி கலாட்டாக்கள் ஒவ்வொன்றும் தியேட்டரை குலுங்க வைக்கும் என்கிறார்கள்.
குஷி படம் போல் மிக குதூகலமான, இக்காலத்துக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிந்தவர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.
படத்தில் இருக்கும் ஐந்து பாடல்களும் டாப் கிளாஸ். அதிலும் பப்பாளி பாடல் அனைவரையும் கட்டாயம் ஆடவைக்கும்.
திருமணத்திற்குப் பின் காதல் என்ற அதிகம் தொடாத ஏரியாவில் கை வைத்திருக்கிறார்கள். ஆனால் இரண்டு மணி நேரம் போவதே தெரியாத அளவிற்கு சுவாரஸ்யமான திரைக்கதை என்கிறார்கள்.
இக்கால இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் மிக ரசனையான காட்சியமைப்புகள் அதற்கேற்ப காமடியான வசனங்ககள் நிச்சயம் விசிலடிக்க வைக்கும் என்று பார்த்தவர்கள் ஐஎஸ்ஓ சான்றிதழ் தருகிறார்கள்.
புத்தம் புதியவர்களால் உருவாக்கப் பட்டிருக்கும் இப்படம் தீபாவளிக்கு வரவிற்கும் பெரிய படங்ககளுடன் போட்டி போடுவதை வைத்துப் பார்க்கும் போதே அதன் தைரியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அந்த அளவிற்கு கதையை நம்பி களம் இறங்கியிருக்கிறார்கள். ஆவலோடு அக்டோபர் 28 வரை காத்திருப்போம்.