சங்கர் ஐ.ஏ.எஸ் அகடாமி சார்பில் குரூப்-1, 2/ 2 A முதன்மை தேர்வுக்கான தொடர் தேர்வு மற்றும் பயிற்சி வகுப்புகள் 28-ஆம் தேதி முதல் தொடங்குகிறது


சங்கர் ஐ.ஏ.எஸ் அகடாமி சார்பில் குரூப்-1, 2/ 2 A முதன்மை தேர்வுக்கான தொடர் தேர்வு மற்றும் பயிற்சி வகுப்புகள் 28-ஆம் தேதி முதல் தொடங்குகிறது
x

சங்கர் ஐ.ஏ.எஸ்அகடாமி

போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில் இந்தியாவிலேயே முன்னணி நிறுவனமாக சங்கர் ஐ.ஏ.எஸ் அகடாமி திகழ்ந்து வருகிறது. 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சங்கர். ஐ.ஏ.எஸ்அகாடமியின் சிறந்த பயிற்சியால் இதுவரை 1,900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் யு.பி.எஸ்.சி. தேர்விலும், 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளிலும், 1500-க்கும் மேற்பட்டோர் வங்கி தேர்வுகளிலும் வெற்றி பெற்று மத்திய மாநிலஅரசு பணிகளில் அங்கம் வகிக்கிறார்கள்.

29 மாநிலங்கள், 27 நாடுகளில் எங்கள் மாணவர்கள் முக்கியஅரசு பொறுப்புகளில் பணிபுரிகிறார்கள். 800-க்கும் மேற்பட்டோர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ் பொறுப்புகளில் கலக்கி வருகிறார்கள்.

மாணவர்களின் தொடர் சாதனை

கடந்த ஜூலை மாதம் வெளியான குரூப் 1 இறுதி முடிவில் சங்கர். ஐ.ஏ.எஸ் அகாடமியின் 42 மாணவர்கள் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி, முதன்மைத் தேர்வில் மாநிலஅளவில் முதல் இரண்டு இடங்களையும் தனதாக்கி சாதனை படைத்தனர். சிறப்பான ஆசிரியர் குழு, தரமான பயிற்சி தொகுப்புகள், அதிகாரிகளின் ஒருங்கிணைந்த வழிகாட்டுதல், தொடர்தேர்வுகள் இவையே எங்கள் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் கோலோச்சி வருவதற்கு முக்கிய காரணங்களாகும்.

கடந்த ஆண்டு நடந்த குரூப்-1 தேர்வில், 66 பணியிடங்களில் தேர்ச்சி பெற்றவர்களில் 36 மாணவர்கள்சங்கர் ஐ.ஏ.எஸ்அகாடமியின் மாணவர்கள் ஆவர். மேலும் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேர்வு தொடர் தொடங்குகிறது

இந்தநிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் குரூப்-1 முதன்மை தேர்வுக்கான தேர்வு தொடர் பயிற்சி வருகிற 28-ந்தேதி முதல் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் தொடங்குகிறது. பயிற்சி காலத்தில் 36 தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தேர்வு வினாக்களின் விடைகளும், விளக்கக் குறிப்புகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தனித்தனியே வழங்கப்படும். வினாத்தாள் கலந்துரையாடல் காணொளி காட்சிகளும் வழங்கப்படும்.

இதேபோன்று குரூப்-2, 2A முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், தொடர் தேர்வுகளும் நடைபெறுகிறது.

இந்த தேர்வு தொடரில் சேரவிரும்பும் மாணவர்கள் சங்கர் ஐ.ஏ.எஸ்அகாடமி பயிற்சி மையங்களையும் அல்லது www.shankariasacademy.com என்றஇணையதளமுகவரியையும் தொடர்புகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 76677 66 266, 90252 78278, 044-43533445/45543082 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.