வி ஐ டி போப்பால் பல்கலைக்கழகத்தில் 'ஸ்டார்ஸ்' திட்ட கவுன்சிலிங் கூட்டம்
20 ஜூலை 2022ல், வி ஐ டி போப்பால் பல்கலைக்கழகம் அதன் 'ஸ்டார்ஸ்' திட்டத்தின் கவுன்சிலிங் கூட்டத்தைக் கூட்டியது. இந்நிகழ்வில், நடப்பு கல்வி ஆண்டில் 22-23, இந்த சிறப்புமிக்க திட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.
கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்துக்கு 2019ஆம் ஆண்டு வி ஐ டி நிறுவனர் மற்றும் வேந்தர் திரு டாக்டர் G விஸ்வநாதன் அவர்களால், (STARS) திட்டம், மத்திய பிரதேசத்தின் கிராமங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. அவ்வாண்டிலிருந்து, வி ஐ டி போப்பால் பல்கலைக்கழகம், மத்திய பிரதேசத்தின் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற, ஒரு மாணவன், மாணவிக்கு ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் இடம் கொடுத்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு 100 சதவீதம் இலவச கல்வி, தங்கும் இடம் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
வி ஐ டி போப்பால் பல்கலைக்கழக துணைத் தலைவர் செல்வி காதம்பரி எஸ் விஸ்வநாதன் பேசுகையில், மத்திய பிரதேசத்தின் கிராமங்களில் கடுமையான சூழ்நிலைகளில் வளர்ந்த குழந்தைகளுக்கு, வி ஐ டி போப்பால் பல்கலைக்கழகம் ஒரு கல்வி நிறுவனமாக மட்டுமல்லாமல் அதையும் தாண்டி எல்லா வகையிலும் ஆதரவாக உள்ளது. அம்மாணவர்களுக்கு வி ஐ டி போப்பால் பல்கலைக்கழகம் இன்னொரு வீடாக இருந்து வருகிறது. இங்கே உள்ள அன்பான பேராசிரியர்கள் மற்றும் மேலாளர்கள், கல்வி மட்டுமல்லாமல் எதிர்காலத்தை எதிர்கொள்ளும் திறமையை கற்றுக்கொடுப்பதோடு மட்டும் நில்லாமல் உணர்வுப்பூர்வமாக அவர்களுக்குப் பக்க பலமாக இருப்பதால் அம்மாணவர்கள் மகிழ்ச்சியோடு பாதுகாப்பையும் உணர்கிறார்கள். மேலும் அவர் மாணவர்களைப் பார்த்து கூறுகையில், நீங்கள் தான் இந்த பல்கலைக்கழகத்தின் பிராண்ட் அம்பாஸிடர்கள், இந்த உலக பல்கலைக்கழகத்திற்கு நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள் என்றார். மத்திய பிரதேசம் தற்சார்புடன் விளங்க, வி ஐ டி போப்பால் பல்கலைக்கழகமும் ஸ்டார்ஸ் திட்டத்தின் மூலம் பங்களிக்கின்றது என்பதை பெருமையுடன் கூறினார். இனி வருங்காலங்களில் பட்டதாரிகள் மத்திய பிரதேசத்தின் கிராமங்களின் தோற்றத்தை மாற்றுவதோடு பொருளாதார சீர்திருத்தங்களிலும் பங்கேற்பார்கள் என்றார். இதுவரை ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் மத்திய பிரதேச கிராமங்களிலிருந்து 82 மாணவர்களும் 57 மாணவிகளும் பயனடைந்துள்ளனர் என்றார்.
மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஸ்டார்ஸ் திட்டம் குறித்து தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்கள். மேலும் வி ஐ டி மேனஜ்மென்ட்டை இந்த முயற்சிக்காக மனதார பாராட்டினார்கள். பிபிஏ பட்டப்படிப்பில் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்த நிதி ஜெயசுவாலின் தந்தை அரவிந்த் ஜெயசுவால் உணர்ச்சிவசப்பட்டு தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், " விஐடி போபால் மேனேஜ்மென்ட் என் மகளின் கல்விக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கின்றது. நாங்கள் கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்கள்; பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்; எப்படியோ அவள் பள்ளி படிப்பை முடித்துவிட்டாள். தற்போது அவள் மிகப் பெரிய கனவு காணவும், சாதனை படைக்கவும் தகுதி பெற்றுவிட்டாள். மேலும் அவர், தலைவர் மதிப்பிற்குரிய டாக்டர் விசுவநாதன் அவர்களை, மத்திய பிரதேசத்தில் இந்த ஸ்டார்ஸ் திட்டத்தை துவங்கியதற்காக மனதாரப் பாராட்டினார். பி.டெக்., எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவி பூனம் தாகூர், பிரதீப் தாகூரின் மகள் ஆவார். இவர் அலிராஜ்பூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றவர். இவரின் வேதியியல் ஆசிரியர் திருமதி துர்காவதி சிங், ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் வி ஐ டி போபால் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடிக்குமாறு அவளை ஊக்கப்படுத்தினார். தன்னுடைய மாணவிக்கு இடம் கொடுத்ததற்காக வி ஐ டியை மனதார பாராட்டினார். வி ஐ டி போபால் கிராமப்புற மாணவர்களுக்கு தரும் ஆதரவை, குறிப்பாக பெண்களுக்கு தரும் ஆதரவை, எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் ஸ்டார்ஸ் மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். மேலும் புதிதாக சேர்ந்த மாணவர்களை ஊக்கப்படுத்தினார்கள்.
விஐடி போபால் பல்கலைக்கழகம் மத்திய இந்தியாவில் ஒரு முதன்மையான தொழிநுட்ப நிறுவனம் ஆகும். மிக சிறந்த கல்வி வழங்குவதின் மூலம் மாணவர்களை தகுதி உடையவர்களாக மாற்றுகிறது; வேலூர் தொழிநுட்ப நிறுவனத்தின் பெருமையை தொடர்கின்றது. ஊக்கமுள்ள மற்றும் திறமையான தொழில்நுட்பாளர்களை உருவாக்கிறது. கால்டெக் (தொழில்நுட்பம் மூலம் கலந்துரையாடல் மற்றும் ஊக்கமான கல்வி) என்ற யுக்தி மூலம் மாணவர்களுக்கு கலந்துரையாடல் மற்றும் தொழில்நுட்பம் வழியாக தரமான கல்விச் சூழலை வழங்குகிறது. ஏ சி எம் பேச்சாளர்கள், நாஸ்காம் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள், எத்திக்கல் ஹேக்கர், மிகச் சிறந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், போன்ற துறைகளில் 100% முனைவர் பட்டம் பெற்ற, பல்வேறு திறமைகளை கொண்ட பேராசிரியர்கள், மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கின்றனர். எங்கள் கல்வி நிறுவனத்தில் 2017-21ல் பி டெக் பட்டம் பெற்று வெளியேறிய முதல் அணி
இளங்கலை மற்றும் முதுகலை (UG, PG) மாணவர்கள், 419 பணி ஆணைகள் பெற்றுள்ளனர். இதில் அதிகபட்ச ஆண்டு ஊதியம் 18 லட்சமாகும். 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் 10 லட்சம் வரை ஆண்டு ஊதியம் பெற்று, தாங்கள் விரும்பிய பணிகளுக்கு பணி ஆணை பெற்றுள்ளனர். எங்களின் இரண்டாவது அணி 2018-22 பி டெக் தேர்ச்சி பெற்ற இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் (UG, PG) 1084 பணி ஆணைகளை பெற்றுள்ளனர். இதில் அதிகபட்ச ஆண்டு ஊதியம் 45 லட்சம் ஆகும். 285 மேற்பட்ட மாணவர்கள் 10 லட்சம் வரை ஆண்டு ஊதியம் பெற்று, தாங்கள் விரும்பிய பணிகளுக்கான பணி ஆணை பெற்றுள்ளனர். மேலும் 173 மாணவர்கள் 5 லட்சம் வரை ஆண்டு ஊதியம் பெற்று தாங்கள் விரும்பிய பணிகளுக்கான பணி ஆணை பெற்றுள்ளனர். பி.டெக்., பட்டப்படிப்பில் 50% மாணவர்கள் தாங்கள் விரும்பிய வேலைகளை பெற்றுள்ளனர்; 10 மாணவர்கள் 20 லட்சத்திற்கும் அதிகமாக ஆண்டு ஊதியம் பெற்றுள்ளனர். 2023 மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பணி நடந்து கொண்டிருக்கின்றன. இதுவரை 50 மேற்பட்டவர்கள் பணி ஆணை பெற்றுள்ளனர்.
துணைத் தலைவர் செல்வி காதம்பரி S விஸ்வநாதன் மொத்தம் 32 மாணவர்களுக்கு அனுமதி கடிதங்களை வழங்கினார் அதில் 19 ஆண்களும் 13 பெண்களும் அடங்குவர். இவர்கள் விஐடி போபாலின் 22-23ஆம் கல்வியாண்டின் Future-Ready Programmesல் சேர்க்கப்பட்டுள்ளனர்.
துணைவேந்தர் டாக்டர் திரு. காமாட்சி முதலி அனைவரையும் வரவேற்றார்; ஸ்டார்ஸ் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அபே வித்யார்த்தி நன்றி உரை வழங்கினார்.