வீடு வாங்குவோருக்கு டிவிஎஸ் எமரால்ட் வழங்கும் அதிரடி சலுகை திட்டங்கள்


வீடு வாங்குவோருக்கு டிவிஎஸ் எமரால்ட் வழங்கும் அதிரடி சலுகை திட்டங்கள்
x

டிவிஎஸ் எமரால்டு நிறுவனம், டிவிஎஸ் குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவு ஆகும். இது தன்னுடைய வருடாந்திர முதல் நிகழ்வாக 'அல்டிமேட் ஹோம் ரஷ்' என்ற ஐந்து புதுமையான திட்டங்களை சென்னை நகரவாசிகளுக்காக கொண்டுவந்துள்ளது. இந்நிறுவனம், மக்களின் கனவு இல்லத்தை, தலைசிறந்த கட்டிட கலைஞர்களால் வடிவமைத்து வழங்குகிறது.

டிவிஎஸ் எமரால்டின் 5 புதுமையான சலுகைகள்

சலுகை 1: 20 - 80 திட்டம் – முதலில் 20% தொகையை மட்டுமே செலுத்தினால் போதும். வீடு முடிந்த பின்பு மீதி 80 சதவிகிதத்தை செலுத்தினால் போதும்.

சலுகை 2: லக்சரி அப்கிரேட் - இச்சலுகை மாட்யுலர் கிச்சன் மற்றும் ஏசியை உள்ளடக்கியது.

சலுகை 3: ஹோம் ஆட்டோமேஷன் -- இதில் ஹோம் ஆட்டோமேஷன் தொகை சலுகையாக வழங்கப்படுகிறது.

சலுகை 4: தங்கம் -- 100 கிராம் தங்கத்தின் மதிப்பிலான தொகை சலுகையாக வழங்கப்படுகிறது.

சலுகை 5: முன்பதிவு தொகையில் ரூபாய் 25 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது.

சென்னையில் டிவிஎஸ் எமரால்ட் வழங்கும் வீடு கட்டுமான திட்டங்கள் எங்கெங்கு உள்ளன?

1. ஸ்மார்ட் ஹோம் @ டிவிஎஸ் எமரால்ட் கிரீன் என்க்ளேவ்:

இது போரூர் சந்திப்பிலிருந்து மூன்று புள்ளி ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இரண்டு மற்றும் மூன்று படுக்கை அறைகள் கொண்ட அடுக்ககங்கள் ஆகும். இவற்றின் விலை ரூபாய் 62 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த வீடுகளை சுற்றிலும் பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2. டிவிஎஸ் எமரால்ட் ஏட்ரியம் @ கிரீன் ஏக்கர்ஸ்:

இது பெருங்களத்தூர் அருகே அமைந்துள்ள 2 மற்றும் 3 படுக்கை அறைகள் கொண்ட அடுக்ககங்கள் ஆகும். இதன் விலை 63 லட்சங்களில் இருந்து தொடங்குகிறது. இந்த குடியிருப்பு வண்டலூர் உயிரியல் பூங்காவின் பின்புறமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3. டிவிஎஸ் எமரால்ட் பெனின்சுலா:

இது கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள, நூறு சதவிகிதம் சாலை மற்றும் தெருக்கள் சந்திப்பில் உள்ள (கார்னர்) அடுக்ககமாக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டவை ஆகும். இது மனப்பாக்கத்தில் அமைந்துள்ள இரண்டு மற்றும் மூன்று படுக்கை அறைகள் கொண்ட அடுக்ககங்கள் ஆகும். இவற்றின் விலை 85 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.

4. டிவிஎஸ் எமரால்டு ஆரண்யா:

சென்னை மேடவாக்கத்தில் அமைந்துள்ள இந்த அழகிய ரிசார்ட் மாதிரியான வில்லாக்கள் சென்னையில் முதல் முறையாக அமைக்கப்பட்ட 2, 3 மற்றும் 3.5 படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் ஆகும். அடர்ந்த மரங்களும், உலகத்தரம் வாய்ந்த, வரிசையாக அமைக்கப்பட்ட கிளப் ஹவுஸ்கள் கொண்ட இந்த குடியிருப்பில் 100க்கும் அதிகமான சர்வதேச தரத்திலான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை 1.24 கோடிகளில் இருந்து தொடங்குகிறது.

5. ஃப்ளோரன்ஸ்:

ஓஎம்ஆரில் உள்ள காரப்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த குடியிருப்புகள் 2000 சதுர அடி கொண்ட வில்லாக்கள் கட்டக்கூடிய மனைகளாக கிடைக்கின்றன. இவை 1.9 கோடி ரூபாய் விலையில் தொடங்குகிறது.

டிவிஎஸ் எமரால்ட் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் குடியிருப்புகள் வெறும் வீடுகளை மட்டும் உள்ளடக்கியதாக இல்லாமல் பல்வேறு வசதிகளையும் தரத்தையும் ஆடம்பரமான அம்சங்களையும் கொண்டதாக இருக்கும். புதிதாக வீடு வாங்கும் வாடிக்கையாளர்கள் 20% தொகையை மட்டுமே கொடுத்து வீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். மீதி பணத்தை வீடு முடிந்து சாவியை கையில் வாங்கும் போது கொடுத்தால் போதுமானது. வாடிக்கையாளர்களின் வசதியையும் நலனையும் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டங்கள் குறுகிய காலம் மட்டுமே இருக்கும் என்பதும், வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்துவதில் கெடுபிடி இல்லாமல் செயல்படும் வசதியையும் அளிக்கிறது என்பது குறிப்பிடதக்கது.