குண்டாகிப் போன இனியா

ஓணம் பண்டிகையையொட்டி எடுக்கப்பட்ட புகைப்படங்களில் வழக்கத்தை விட இனியா சற்று குண்டாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.;

Update:2022-09-16 09:17 IST

2011-ம் ஆண்டு வெளியான 'வாகை சூடவா' என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர், இனியா. இவர் 'மவுன குரு', 'மாசாணி', 'நான் சிகப்பு மனிதன்' என பல படங்களில் நடித்துள்ளார். 'வாகை சூடவா' படத்துக்காக சமீபத்தில் தமிழக அரசின் சிறந்த கதாநாயகிக்கான விருதை பெற்றார்.

இதற்கிடையில் ஓணம் பண்டிகையையொட்டி, இனியா ஒரு 'போட்டோசூட்' நடத்தியுள்ளார். இதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்த புகைப்படங்களில் வழக்கத்தை விட இனியா சற்று குண்டாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இனியா ஆளே மாறிப் போய்விட்டார் என்று விமர்சனங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்