பதான் 2-வது பாகத்தில் இருந்து இயக்குனர் விலகலா?

பதான் படம் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்தது.;

Update:2024-03-30 16:33 IST
பதான் 2-வது பாகத்தில் இருந்து இயக்குனர் விலகலா?

மும்பை,

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருந்த படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருந்தார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் இந்தியா முழுவதிலும் 8,000 திரையரங்குகளில் வெளியானது.

பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி, இப்படம் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்தது.

சமீபத்தில், இப்படத்தின் 2-ம் பாகம் தயாராகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்தின் 2-ம் பாகத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

பதான் கதைக்கு ஒரு புதிய அம்சத்தை கொண்டுவர பதான் 2-வது பாகத்தை வேறொருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் இயக்குனர் தேர்வு செய்யப்படவில்லை என்றும்  இந்த வருட இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்