சத்யராஜுடன் மம்முட்டி, மோகன்லால் - சிபி சத்யராஜ் பகிர்ந்த புகைப்படம் வைரல்

நடிகர் சிபி சத்யராஜ் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2024-05-24 05:30 GMT

சென்னை,

நடிகர் மம்முட்டி நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் டர்போ. இப்படத்தை வைசாக் இயக்கி இருக்கிறார். வைசாக் இதற்கு முன் மோகன்லாலை வைத்து புலிமுருகன் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். படத்தின் கதையை மிதுன் மானுவேல் தாமஸ் எழுதியுள்ளார். சுனில், அஞ்சனா ஜெய பிரகாஷ், கபீர்,சித்திக், திலிஷ் போதன் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், டர்போ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று பாராட்டி நடிகர் சிபி சத்யராஜ் புகைப்படம் ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், மோகன்லால், மம்முட்டி மற்றும் சத்யராஜ் இருக்கின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான லைலா ஓ லைலா படத்தில் மோகன்லாலும் சத்யராஜும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்