கார்த்தி நடித்துள்ள 'ஜப்பான்' படத்தின் முதல் பாடல் வெளியானது.!

'ஜப்பான்' படத்தின் முதல் பாடலான'டச்சிங் டச்சிங்' கார்த்தி குரலில் வெளியாகியுள்ளது.

Update: 2023-10-23 14:59 GMT

சென்னை,

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் என படக்குழு முன்னதாக அறிவித்து இருந்தது.

அதன்படி, ஜப்பான்' படத்தின் முதல் பாடலான'டச்சிங் டச்சிங்' பாடல் வெளியாகியுள்ளது. கார்த்தி குரலில் இந்த பாடல் வெளிவந்துள்ளது.  

Full View
Tags:    

மேலும் செய்திகள்