அக்னிபத் கலவரம்: தெலுங்கானாவில் போலீஸ் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி; 15 பேர் படுகாயம்

தெலுங்கானா, செகந்திராபாத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update:2022-06-17 14:27 IST

ஐதராபாத்,

அக்னி பத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிகார், உத்தரப் பிரதேச, தெலுங்கானா மாநிலங்களில் பயங்கர வன்முறை வெடித்துள்ளது. ரெயில் பெட்டிகள் எரிப்பு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா ரெயில் நிலையத்தில் வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தெலுங்கானா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ரெயில்வே துறை மூத்த அதிகாரி ஒருவர், ரெயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய லத்தி சார்ஜ், கண்ணீர் புகை குண்டு என எதுவும் பலன் தராத நிலையில் அவர்கள் வலுக்கட்டாயமாக துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்