காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயற்சி.. பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதி சுட்டுக்கொலை

பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.;

Update:2024-04-05 12:41 IST

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. பயங்கரவாதிகளின் ஊடுருவலை பாதுகாப்புப்படையினர் முறியடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் புரா நாலா ருஸ்தம் என்ற இடத்தில் எல்லைப்பகுதி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் மர்ம நபர்களின் நடமாட்டத்தை பாதுகாப்பு படையினர் கவனித்தனர். அவர்களை தடுத்து நிறுத்த பாதுகாப்பு படையினர் முயன்றபோது, அந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். அத்துடன், ஊடுருவல் முயற்சியும் முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எஞ்சியவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

Tags:    

மேலும் செய்திகள்