‘‘இந்திய சின்னங்களை அவமதிப்பதை கைவிடுங்கள்’’ ‘அமேசான்’ நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ‘அமேசான்’, இந்திய தேசிய கொடி உருவம் பதித்த மிதியடிகளை தனது கனடா இணையதளம் மூலம் விற்பனைக்கு கொண்டு வந்தது.

Update: 2017-01-15 22:30 GMT

புதுடெல்லி,

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ‘அமேசான்’, இந்திய தேசிய கொடி உருவம் பதித்த மிதியடிகளை தனது கனடா இணையதளம் மூலம் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதற்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழுந்த பிறகு, அதை விற்பனை செய்வதை கைவிட்டது.

இருப்பினும், மகாத்மா காந்தி உருவம் பொறித்த செருப்புகளை அமெரிக்க இணையதளத்தில் அந்நிறுவனம் விற்பனைக்கு வைத்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு மத்திய அரசின் பொருளாதார விவகார செயலாளர் சக்திகாந்த தாஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘‘அமேசான், ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். இந்திய சின்னங்களையோ, தலைவர்களையோ அவமதிப்பதை கைவிட வேண்டும். இல்லாவிட்டால், அது அந்நிறுவனத்தின் அழிவுக்கே வழிவகுக்கும்’’ என்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.

தனது மற்றொரு பதிவில், இந்திய குடிமகன் என்ற முறையிலேயே அக்கருத்தை கூறியதாகவும், அதற்கு வேறு அர்த்தம் கொள்ளக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்