சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு

பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவுடன் தினகரன் சந்தித்து பேசினார்.

Update: 2018-07-16 23:30 GMT
பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளருமான டி.டி.வி. தினகரன், இளவரசியின் மகன் விவேக், விவேக்கின் மனைவி மற்றும் உறவினர் ராஜராஜன் ஆகியோர் நேற்று பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தனர்.

பின்னர், அவர்கள் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை நடந்தது. பின்னர் சிறை முன்பு டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பு நிச்சயம் வரும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்படும். 18 பேரும் முதல்-அமைச்சரை மாற்ற கோருவார்கள். நான் ஆட்சி வேண்டாம் என சொல்கிறேன். துரோகத்தை கருவோடு அறுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இதை கூறுகிறேன். தியாகம், தர்மம் யார் பக்கம் இருக்கிறதோ அவர்களுக்கு இயற்கையும் துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்