சீக்கிய குரு கோபிந்த் சிங் பிறந்தநாளை முன்னிட்டு புதிய நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி

சீக்கிய குரு கோபிந்த் சிங் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவாக புதிய நாணயத்தை பிரதமர் மோடி நாளை (13-ம் தேதி) வெளியிடுகிறார்.

Update: 2019-01-12 14:36 GMT
புதுடெல்லி,

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் மறைவுக்கு பின்னர் பலர் அம்மதத்தில் குருமார்களாக இருந்து சீக்கியர்களை வழிநடத்தி வந்தனர். இவ்வகையில் 10-வது சீக்கிய குருவான கோபிந்த் சிங் 1708-ம் ஆண்டில் மறைந்தார். இவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி நாளை வெளியிடவுள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் குரு கோபிந்த் சிங் நினைவு நாணயம் வெளியிடப்பட உள்ளது. (13-ம் தேதி) நாளை நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் மோடி நாணயத்தை வெளியிட்டு சிறப்பு உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பாட்னாவில் நடைபெற்ற குரு கோபிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாள் விழாவின் போது அவரது நினைவு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டது நினைவுகூறத்தக்கது.

மேலும் செய்திகள்