மகாராஷ்டிராவில் லேசான அளவில் நிலநடுக்கம்

மகாராஷ்டிராவில் இன்று லேசான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

Update: 2019-02-13 09:16 GMT
மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தின் சில பாகங்களில் இன்று லேசான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.1 ஆக பதிவாகி உள்ளது.  இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பிற சேதவிவரங்கள் வெளியாகவில்லை.

கடந்த வருடம் நவம்பரில் இருந்து இதுபோன்ற நிலநடுக்கங்கள் மகாராஷ்டிராவில் தொடர்ச்சியாக விட்டு விட்டு உணரப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் கடந்த 1ந்தேதி 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் அன்று மதியம் 2.06, 3.53 மற்றும் மாலை 4.57 மணி அளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் முறையே 4.1, 3.6 மற்றும் 3.5 என்ற அளவில் பதிவானது.

இதனால் அந்த பகுதியில் கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது. அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சம் புகுந்தனர்.  தஹானு மற்றும் தலசாரி பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

வீடுகளில் இருந்து மக்கள் ஓடி சென்றதில் 2 வயது சிறுமி கீழே விழுந்து காயமடைந்து பின் உயிரிழந்தது.

தொடர்ந்து கடந்த 7ந்தேதியும் பால்கரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதனால் அரசு நிர்வாகம், இதுபோன்ற அவசர காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கடந்த 12ந்தேதியில் இருந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.  இது வருகிற 21ந்தேதி வரை நடைபெறும்.

மேலும் செய்திகள்