இந்தியாவின் பணக்கார வேட்பாளர் டெபாசிட் இழந்தார் - 5 பெரும் பணக்காரர்கள் மட்டுமே வெற்றி

இந்தியாவின் பணக்கார வேட்பாளர் தனது டெபாசிட்டை இழந்தார். மேலும் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 5 பெரும் பணக்காரர்கள் மட்டுமே வெற்றிபெற்றனர்.

Update: 2019-05-24 21:14 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து விவரம் அடிப்படையில், பெரும் பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர் ரமேஷ் குமார் சர்மா. இவரது சொத்து மதிப்பு ரூ.1,107 கோடி. பீகார் மாநிலம் பாடலிபுத்திரா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட இவர் வெறும் 1,556 ஓட்டுகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார்.

முதல் 10 இடங்களில் உள்ள பெரும் பணக்கார வேட்பாளர்களில் காங்கிரசை சேர்ந்த நகுல் நாத் (மத்தியபிரதேசம்), எச்.வசந்தகுமார் (தமிழ்நாடு), டி.கே.சுரேஷ் (கர்நாடகா), ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசை சேர்ந்த கனுமுரு ரகுராம கிருஷ்ணராஜா, ஜெயதேவா கல்லா (ஆந்திரா) ஆகிய 5 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

முதல் 10 இடங்களில் உள்ள பெரும் பணக்காரர்களில் காங்கிரசை சேர்ந்த ஜோதிர்ஆதித்ய சிந்தியா, உதய்சிங், கொண்ட விஷ்வேஸ்வர் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசை சேர்ந்த பிரசாத் வீர பொட்லுரி ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

மேலும் செய்திகள்