புனேயில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழைக்கு 17 பேர் பலி

மராட்டியத்தில் பெய்து வரும் பருவமழை வரலாற்று சிறப்புமிக்க நகராக கருதப்படும் புனேயை பதம் பார்த்தது. அந்த நகரில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை கொட்டியது.

Update: 2019-09-26 23:30 GMT
புனே, 

நேற்று காலை வரை மழை நீடித்த பேய் மழையால் புனேயின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. பல தெருக்களில் சுமார் 7 அடி உயரத்துக்கு மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் பொதுமக்கள் மொட்டை மாடி கூரைகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் பலர் மரங்களில் ஏறியும் உயிரை காப்பாற்றிக்கொண்டனர். பொழுது விடிந்தபோது தான் புனே நகரம் உருக்குலைந்து கிடந்தது தெரியவந்தது. தெருக்களில் குப்பை குவியல் போல வாகனங்கள் குவிந்து கிடந்தன. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி உருக்குலைந்து கிடந்தன.

இந்த மழைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 17 பேர் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. புனேயில் ஒரே நாளில் 20 செ.மீ. மழை பதிவானது. மழை காரணமாக புனே மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

மேலும் செய்திகள்