கேரளாவில் சட்டசபை இடைத்தேர்தல்: ஆளும் இடதுசாரி கூட்டணி வெற்றி

கேரளாவில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில், ஆளும் இடதுசாரி கூட்டணி வெற்றிபெற்றது.

Update: 2019-09-27 19:06 GMT
கோட்டயம்,

கேரள மாநிலம் கோட்டயம் அருகே பழா சட்டசபை தொகுதியில் கேரள காங்கிரஸ் (எம்) தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான கே.எம்.மாணி 50 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் காலமானார். இதையடுத்து, காலியாக இருந்த அந்த தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது.

நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில், ஆளும் இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிட்ட கப்பன் வெற்றி பெற்றார். அவர் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட கேரள காங்கிரஸ் (எம்) வேட்பாளர் ஜோஸ் டாம் புலிக்குனலை 2 ஆயிரத்து 943 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த இடதுசாரி கூட்டணிக்கு இந்த முடிவு ஆறுதலாக அமைந்துள்ளது. காலியாக உள்ள இன்னும் 5 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

மேலும் செய்திகள்