மலேசிய பாமாயில் இறக்குமதிக்கு அரசு தடை விதிக்கவில்லை -பியூஸ் கோயல்

மலேசிய பாமாயில் இறக்குமதிக்கு அரசு தடை விதிக்கவில்லை என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-30 17:57 GMT
புதுடெல்லி,

காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இந்திய  அரசின்  நடவடிக்கையால், பாகிஸ்தான் கடும் அதிருப்தி அடைந்ததோடு உலக நாடுகளின் ஆதரவை திரட்ட முயன்றது.

அதைத்தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் அந்நாட்டில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று தனது உறுப்பினர்களை சியாய் ((SEAI)) அமைப்பு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் மத்திய வர்த்தக மந்திரி பியுஷ் கோயல் இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், “மலேசிய பாமாயில் இறக்குமதி தடை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. சங்கத்தினருக்குக் காஷ்மீர் விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாடு பிடிக்காமல் இருந்திருக்கலாம். காஷ்மீர் பிரச்சினை என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால் அதில் மலேசியா தலையிடுவதை சங்கத்தினர் விரும்பாமல் இருந்திருக்கலாம். ஆனால் அரசு மலேசிய பாமாயில் இறக்குமதிக்குத் தடை விதிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்