உத்தரபிரதேச அரசு அதிரடி; 7 போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு

உத்தரபிரதேச அரசு துறைகளில் திறம்பட பணியாற்றாதவர்கள், முறைகேடு புகார்களில் சிக்கியவர்கள், ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என மாநில அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

Update: 2019-11-07 22:48 GMT
லக்னோ, 

பல்வேறு துறைகளை சேர்ந்த 72 ஊழியர்கள் கடந்த ஜூலை மாதம் இந்த நடவடிக்கையின் கீழ் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக மூத்த போலீஸ் அதிகாரிகள் 7 பேருக்கு தற்போது கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. டி.எஸ்.பி. தரத்தில் பணியாற்றும் இந்த 7 பேரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். தங்கள் பணியை சிறப்பாக செய்யாத காரணத்தால் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் சிலர் மீது முறைகேடு புகாரும் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதைப்போல மேலும் 24 போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிப்பதற்காக, அவர்களது பெயர் பட்டியல் முதல்-மந்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்