பீகாரில் சட்டசபைக்கு வெங்காய மாலை அணிந்து வந்த எம்.எல்.ஏ.

பீகாரில் சட்டசபைக்கு எம்.எல்.ஏ. ஒருவர் வெங்காய மாலை அணிந்து வந்தார்.

Update: 2019-11-27 20:45 GMT
பாட்னா,

பீகாரில் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி பேசுவதற்காக எதிர்க்கட்சியான ராஷ்டிரீய ஜனதாதளம் எம்.எல்.ஏ. சிவ்சந்திர ராம் நேற்று சட்டசபை வளாகத்துக்கு வெங்காய மாலை அணிந்து வந்தார். சட்டசபைக்கு செல்லும் முன்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காய்கறிகள் விலை உயர்ந்துவருவதால் மக்கள் தங்கள் அன்றாட உணவை இழந்துவிட்டனர். வெங்காயம் வழக்கமாக கிலோ ரூ.50-க்குள் இருக்கும். ஆனால் இப்போது ஒரு கிலோ ரூ.80 வரை விற்கிறது. உண்மையை சொல்லப்போனால் நான் இந்த வெங்காயத்தை (மாலையை காட்டி) கிலோ ரூ.100 என்ற விலையில் வாங்கினேன். முதல்-மந்திரி நிதிஷ்குமார் நியாய விலையில் காய்கறி வழங்கும் கடைகள் திறக்கப்படும் என்ற வெற்று அறிவிப்பை வெளியிட்டார். நான் இதுவரை ஒரு கடையை கூட பார்க்கவில்லை. வெங்காயம் கிலோ ரூ.10-க்கு வழங்க முதல்-மந்திரி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்