நமாமி கங்கா திட்டம்: தேசிய கவுன்சிலின் முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

நமாமி கங்கா திட்டத்தின் தேசிய கவுன்சிலின் முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

Update: 2019-12-14 09:51 GMT
கான்பூர்

கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

முன்னதாக கான்பூர் விமான நிலையம் வந்தடைந்த பிரதமரை, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், நடைபெற்ற கூட்டத்தில் மோடி பங்கேற்றார்.

அவருடன் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத், உத்தர பிரதேச  முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ராவத், பீகார் துணை முதல்-மந்திரி சுஷில் மோடி உள்ளிட்டோர்  பங்கேற்றனர். அதில் கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட நமாமி கங்கா திட்டம்  குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்