அசாமில் தடுப்புக் காவல் மையம் எதுவும் கட்டப்படவில்லை - மக்களவையில் மத்திய அரசு தகவல்

அசாமில் தடுப்புக் காவல் மையம் எதுவும் கட்டப்படவில்லை என்று மத்திய அரசு மக்களவையில் அறிவித்துள்ளது.

Update: 2020-02-05 06:00 GMT
புதுடெல்லி

பாராளுமன்ற மக்களவையில் நேற்று  உறுப்பினர்  பிரதயுத்தின் கேள்விக்கு பதிலளித்து உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய்  கூறும் போது

அசாமில் தடுப்புக் காவல் மையம் எதுவும்  கட்டப்படவில்லை வேறு எங்கும்கூட இத்தகைய தடுப்புக் காவல் மையங்கள் கட்டப்படவில்லை என தெரிவித்தார். 

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த  பாதிப்பும் இல்லை.

அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை முறைப்படுத்தவும் பாகிஸ்தான் ,வங்கதேசம், ஆப்கானிஸ்தான்  ஆகிய நாடுகளின் சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்கத் தான் அரசு இச்சட்டங்களைப் பயன்படுத்தும் என்றும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்