அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 57-வது நாளாக அமலில் உள்ளது.

Update: 2020-05-20 02:58 GMT
கோப்பு படம்
புதுடெல்லி,

மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில்,  நாட்டில் கொரோனா பாதிப்பை குறைக்க மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் 4-வது முறையாக பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி வரை அமலில் உள்ளது.  இதற்கு மத்தியில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், 20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார சிறப்பு தொகுப்பையும்  பிரதமர் அறிவித்தார். எனவே, இந்த திட்டங்கள் மூலம் பொருளாதாரத்தை மீட்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத்தெரிகிறது.

பொருளாதாரத்தை சீர் செய்ய, மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, பொருளாதாரத்தை மீட்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும் செய்திகள்