டெல்லியில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பு

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Update: 2020-06-30 18:28 GMT
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் முறையான சிகிச்சை, இறந்தோரின் உடல்களை கண்ணியமாக கையாண்டு அடக்கம் செய்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து  வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, கொரோனா மருத்துவமனைகளை ஆய்வு செய்ய டெல்லி சுகாதாரத் துறை 3 குழுக்களை அமைத்துள்ளது.

ஒவ்வொரு குழுவிலும் 4 நபர்கள் வீதம் டெல்லியில் உள்ள கொரோனா சிகிச்சை முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய உள்ளனர். இந்த ஆய்வு அறிக்கைகளை ஒவ்வொரு வாரமும் டெல்லி மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு தாக்கல் செய்ய உள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆனந்த மோகன், ஏஞ்சல் ரஞ்சன் சிங், ககன்தீப் ஆகிய மூவர் தலைமையில் நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. எந்தெந்த மருத்துவமனைகளை ஆய்வு செய்ய வேண்டும் என டெல்லி சுகாதாரத் துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்