கடலோர பகுதிகளில் 1,100 பள்ளிகளில் என்.சி.சி. பயிற்சி - ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தகவல்

கடலோர பகுதிகளில் 1,100 பள்ளிகளில் என்.சி.சி. பயிற்சி அளிக்கப்படும் என ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-22 02:41 GMT
புதுடெல்லி,

டெல்லியில் நேற்று என்.சி.சி. முகாம் நடைபெற்றது. அதில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

என்.சி.சி. பயிற்சியை விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். நாட்டின் எல்லை பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் என்.சி.சி. பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கருதுகிறார்.

அத்தகைய 1,100-க்கு மேற்பட்ட பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அப்பள்ளிகளிலும் என்.சி.சி. பயிற்சி அளிக்கப்படும். என்.சி.சி.யில் மாணவிகள் எண்ணிக்கை 43 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசு வேலைவாய்ப்பில் என்.சி.சி. மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் அளிக்கப்பட்டு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்