கர்நாடகாவில் மேலும் 16,604- பேருக்கு கொரோனா தொற்று

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,604 -பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-31 13:58 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா 2-வது அலை வேகமெடுக்க தொடங்கியது. இதனால் மாநிலத்தில் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வந்தது. முதல் அலையை விட 2-வது அலையின் பரவல் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த ஏப்ரல் 24-ந் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. 

 ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. தற்போது தினசரி சுமார் 20 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தலைநகர் பெங்களூருவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தின் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 

இந்த நிலையில், கர்நாடகாவில் மேலும்  16,604- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 44,473- பேர் குணம் அடைந்த நிலையில் 411- பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 13 ஆயிரத்து 370- ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்