காஷ்மீர்: மினி பஸ் விபத்தில் சிக்கி 10 பேர் காயம்
10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் நிலைமை சீராக உள்ளது என டாக்டர் ரூபினோ கூறினார்.;
பூஞ்ச்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சத்ரூ நகரில் மினி பஸ் ஒன்று விபத்தில் சிக்கியது. இதில் மினி பஸ்சில் பயணித்த 10 பேர் காயம் அடைந்தனர்.
சம்பவம் பற்றி அறிந்ததும் உள்ளூர் மக்களால் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆம்புலன்சும் சம்பவ பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுபற்றி டாக்டர் ரூபினோ செய்தியாளர்களிடம் கூறும்போது, 10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் நிலைமை சீராக உள்ளது. யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை. சிறிய அளவிலான காயங்களே ஏற்பட்டு உள்ளன என கூறினார். இந்த விபத்திற்கான காரணம் பற்றி தெரிய வரவில்லை. அதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.