கோவாவில் வரும் 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

கோவாவில் வரும் 12 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-02 15:21 GMT
பானஜி,

கோவாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தற்போது அமலில் உள்ள ஊரடங்கை வரும் 12- ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு காலத்தில் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்படும் என்றும், சலூன்கடைகள் மற்றும் வெளிப்புற விளையாட்டு வளாகம் திறககலாம் என முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். 

கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,174 - ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்