காஷ்மீரில் என்கவுண்ட்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் அடையாளம் காணப்படாத பயங்கரவாதியை வீரர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.;
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பந்திபோராவில் சந்தஜி பகுதியில் பாதுகாப்பு படையினர் அடையாளம் காணப்படாத ஒரு பயங்கரவாதியை சுட்டு கொன்றுள்ளனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதுபற்றி காஷ்மீர் போலீசார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கடந்த மாதம் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளனர்.