குஜராத்: தொழிற்சாலையில் வாயு கசிந்து 6 பேர் பலி

குஜராத்தில் தொழிற்சாலையில் வாயு கசிந்து 6 பேர் பலியாகியுள்ளனர்.

Update: 2022-01-06 03:41 GMT
சூரத்,

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தின் சச்சின் ஜிஐடிசி பகுதியில் ஒரு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஊழியர்கள் வழக்கம் போல வேலை செய்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை தொழிற்சாலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. வாயு கசிவால் ஏற்பட்ட பெரும் புகையின் காரணமாக மூச்சு தினறல் ஏற்பட்டு 6 பேர் பரிதாபமக உயிரிந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சூரத் போலீசார் காயமடைந்த 20 பேரை மீட்டு அருகில் உள்ள சிவில் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொழிற்சாலையில் இருந்து டேங்கர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட இரசாயனத்தை தொழிற்சாலை அருகே இருந்த பாதாள சாக்கடையில் டேங்கர் லாரி டிரைவர் ஊற்றியுள்ளார். அப்போது கழிவு நீருடன், இரசாயனம் கலந்து எதிர்பாதமாக வாயு கசிவு ஏற்பட்டதாகவும், வாயு கசிவால் ஏற்பட்ட புகையின் காரணமாக என்ன நடக்கிறது என்பதை சுதாரிப்பதற்குள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த சம்பவம் குறித்து சூரத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்