திருப்பதியில் போலி ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை விற்று மோசடி

திருப்பதி ஏழுமலையானை ரூ.300 டிக்கெட்டில் சாமி தரிசனம் செய்வதற்காக புதுச்சேரியைச் சேர்ந்த பக்தர்கள் 3 பேர் திருமலைக்கு சென்றனர்.

Update: 2022-01-28 21:15 GMT
திருமலை, 

திருப்பதி ஏழுமலையானை ரூ.300 டிக்கெட்டில் சாமி தரிசனம் செய்வதற்காக புதுச்சேரியைச் சேர்ந்த பக்தர்கள் 3 பேர் திருமலைக்கு சென்றனர். அவர்கள் வைத்திருந்த ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேனிங் மையத்தில் தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

அவர்கள் வைத்திருந்தது போலி ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் என தெரிய வந்தது. அவர்களை பிடித்து தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களுக்கு திருப்பதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மவுன் குமார், நண்பர் சவுந்தர் ஆகியோர் போலி ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாக கூறினர்.

அதற்காக இருவரும், பக்தர்களிடம் இருந்து போன்பே மூலம் ரூ.4 ஆயிரம் கட்டணமாக பெற்றுள்ளனர். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் அந்தப் பக்தர்களை திருமலை 2-டவுன் போலீசில் ஒப்படைத்தனர். இருவர் மீதும் மோசடி வழக்காக போலீசார் பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்