ஆசிட் வீச்சு வழக்கில் சிறை தண்டனை பெற்ற நபர் - மிரட்டல் விடுத்ததால் மீண்டும் கைது

ஆசிட் வீச்சு வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலையான நபர், மீண்டும் அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததால் 2-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-03-23 09:30 GMT
புதுடெல்லி,

இளம்பெண் மீது ஆசிட் வீசிய வழக்கில் சிறை தண்டனை பெற்று, பின்னர் விடுதலையான நபர், மீண்டும் அதே பெண் மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர். 

இது குறித்து டெல்லி போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“உத்தர பிரதேச மாநிலத்தில் இளம்பெண் மீது ஆசிட் வீசிய வழக்கில் அந்த பெண்ணின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த அந்த நபர், கடந்த 2011 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையானார்.

இந்த நிலையில் அதே நபர் மீண்டும் தன் மீது ஆசிட் வீசுவதாதாக மிரட்டல் விடுப்பதாகவும், தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் பாதிக்கப்பட்ட அந்த பெண் டெல்லி சுல்தான்புரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்து, அவர் மீது இந்திய தண்டனைச் செட்டம் 376 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.”

இவ்வாறு டெல்லி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்