உல்லாஸ் நகர் தொழிற்சாலையில் நைட்ரஜன் டேங்கர் லாரி வெடித்து 4 தொழிலாளர்கள் பலி

உல்லாஸ் நகர் தொழிற்சாலையில் நைட்ரஜன் டேங்கர் லாரி வெடித்து சிதறிய விபத்தில் 4 தொழிலாளர்கள் பலியாகினர். .

Update: 2023-09-24 00:00 GMT

நைட்ரஜன் டேங்கர் லாரி

தானே மாவட்டம் உல்லாஸ்நகர் அருகே சாகட் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்று வழக்கம் போல வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது தொழிற்சாலை வளாகத்தில் நைட்ரஜன் வாயு அடங்கிய டேங்கர் லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த டேங்கர் திடீரென வெடித்து தூள் தூளாக பறந்தது. டேங்கர் சிதறிய போது பயங்கர சத்தம் கேட்டது. இதில் டேங்கர் அருகே வேலை செய்து கொண்டு இருந்த 7 தொழிலாளிகள் பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயமடைந்த 7 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

4 தொழிலாளர்கள் பலி

இதில் 4 தொழிலாளிகள் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். மற்ற 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களில் 3 பேரின் அடையாளம் காணப்பட்டு உள்ளது.

டேங்கர் லாரியில் கொண்டு வரப்பட்ட நைட்ரஜன் தொழிற்சாலையில் உள்ள கொள்கலனில் நிரப்பப்பட்டபோது இந்த விபரீதம் நடந்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். டேங்கர் வெடித்த போது அப்பகுதியில் ஏற்பட்ட அதிர்வால் சுற்றுப்புற பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்