அன்னபாக்ய திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசி வழங்கப்படும்; கர்நாடக அரசு உறுதி

அன்னபாக்ய திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று கர்நாடக அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.

Update: 2023-07-07 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்து முதல்-மந்திரி சித்தராமையா கூறியதாவது:-

ஏழை மக்கள் பசியுடன் இருக்க கூடாது என்பதற்காக அன்னபாக்ய திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் 5 கிலோ அரிசியுடன், மாநில அரசு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கி வருகிறது. தற்போது அன்னபாக்ய திட்டத்திற்கு மத்திய அரசு அரிசி தர மறுப்பதால், அந்த திட்டம் தொடங்க தாமதமாகிறது. ஏழைகளுக்கு அரிசி வழங்கும் திட்டத்திற்குமத்திய அரசு அரிசி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.அன்னபாக்ய திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசி வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 5 கிலோ அரிசிக்கு பதில் பணம் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. அன்னபாக்ய திட்டத்தின் ஏழைமக்களுக்கு 10 கிலோ அரிசி வழங்குவது உறுதி. அன்னபாக்ய திட்டத்தின் கீழ் 4.42 மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இதற்காக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. மாநிலத்தில் 40 லட்சம் ஏழை குடும்பத்தினரை வறுமை கோட்டிற்கு கீழ் சேர்க்க மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. அந்த 40 லட்சம் குடும்பத்தினரையும் பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்களாக மாநில அரசு ஏற்றுக் கொண்டு, அன்னபாக்ய திட்டத்தின் கீழ் சேர்த்துள்ளது. இதற்காக மாநில அரசு ஒரு ஆண்டுக்கு ரூ.1,680 கோடியை ஒதுக்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்