புதிய வாக்காளர்களை குறிவைக்கும் பா.ஜனதா: வீடியோ மூலம் மத்திய அரசின் திட்டங்கள் பற்றி விளக்கம்

மோடியின் 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் இளைஞர்கள் வாழ்க்கைத்தரம் முன்னேறி இருப்பதாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

Update: 2024-03-14 21:03 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க போகும் புதிய வாக்காளர்களை கவர சமூக வலைத்தளங்களை பா.ஜனதா தீவிரமாக பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், அவர்களை கவரும்வகையில், குறுகிய நேர வீடியோக்களை பா.ஜனதா வெளியிட்டுள்ளது. அவற்றில், மத்திய அரசின் திட்டங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. மோடியின் 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் இளைஞர்கள் வாழ்க்கைத்தரம் முன்னேறி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகரிப்பு, தேசிய கல்வி கொள்கை, 15 புதிய எய்ம்ஸ், 7 ஐ.ஐ.டி.கள் நிறுவியது, விண்வெளி துறையில் 'சந்திரயான்-3', 'மங்கள்யான்', 'ஆதித்யா எல்1' ஆகிய சாதனைகள், மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் ஆறு மாத ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, பார்லிமென்டில் 33 சதவீத இடஒதுக்கீடு போன்ற முயற்சிகள் பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு எடுத்துக்காட்டுகளாக இருப்பதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்