சர்வதேச தரத்தில் அரசு பப்ளிக் பள்ளிகள் திறப்பு; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேச்சு

கிராம பஞ்சாயத்துகளில் சர்வதேச தரத்தில் அரசு பப்ளிக் பள்ளிகள் திறக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

Update: 2023-10-06 22:13 GMT

பெங்களூரு:

கிராம பஞ்சாயத்துகளில் சர்வதேச தரத்தில் அரசு பப்ளிக் பள்ளிகள் திறக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

செலவிட வேண்டும்

பெங்களூரு அருகே உள்ள மாகடியில் அரசு பப்ளிக் பள்ளி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கலந்துகொண்டு அந்த பள்ளியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கல்விக்காக நகரங்களை நோக்கி இடம்பெயர்வதை தடுக்க வேண்டும். கிராம பஞ்சாயத்துகளில் சர்வதேச தரத்தில் அரசு பப்ளிக் பள்ளிகளை திறக்க வேண்டும் என்பது எனது கனவு. அத்தகைய பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுப்பேன். இதை துரிதமாக செயல்படுத்துவேன். ராமநகரில் உள்ள தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தில் கிடைக்கும் நிதி கல்வி நோக்கத்திற்கு மட்டும் செலவிட வேண்டும் என்று கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பணம் கிடைக்கவில்லை

ரூ.36 கோடி நிதி இதுவரை வந்துள்ளது. சமுதாய முன்னேற்றத்திற்கு கல்வி மிக முக்கியம். கல்வி கற்கும் வயது கடந்து போய்விட்டால் மீண்டும் அந்த வயது கிடைக்காது. மாணவ பருவத்தில் எந்த அளவுக்கு கல்வி கற்க முடியுமோ அந்த அளவுக்கு கல்வி கற்க வேண்டும். உங்களின் பெற்றோரின் கனவை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். நீங்கள் வேரை மறந்தால், பழம் கிடைக்காது.

தகுதியானவர்களில் 88 சதவீதம் பேருக்கு கிரகலட்சுமி திட்ட நிதி உதவி கிடைத்துள்ளது. சிலருக்கு வங்கி கணக்கு இல்லாததால் பணம் கிடைக்கவில்லை. விலைவாசி உயர்வால் கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் அரசின் உத்தரவாத திட்டங்களால் மக்களுக்கு சிறிதளவு நிவாரணம் கிடைத்துள்ளது. பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகையை கணவரிடம் கொடுக்க வேண்டாம். நீங்களே அதை சேமிக்க வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்