டெல்லி தீ விபத்து: தகுதியற்ற மருத்துவர்களால் மருத்துவமனை இயங்கி வந்தது கண்டுபிடிப்பு

டெல்லி மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தன.

Update: 2024-05-26 18:32 GMT

டெல்லி,

கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், மருத்துவமனையில் இருந்த 7 குழந்தைகள் உயிரிழந்தன.

இந்த நிலையில், டெல்லி மருத்துவமனை தீ விபத்து விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை தகுதியில்லா மருத்துவர்களை கொண்டு செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் பணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்கும் கருவிகள் இல்லை என்பதும், அவசர வழி எதுவும் மருத்துவமனை நிர்வாகத்தால் திறக்கப்படவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.   

Tags:    

மேலும் செய்திகள்