நெதர்லாந்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம்: சாலைமறியலில் ஈடுபட்ட 2,400 பேர் கைது

நெதர்லாந்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-10 22:35 GMT

ஹேக்,

காலநிலை மாற்றம் என்பது தற்போது உலகம் சந்திக்கும் பெரும் பிரச்சினையாக கருதப்படுகிறது. இதற்கு தீர்வு காண கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் நெதர்லாந்து நாட்டில் புதை படிவ எரிபொருட்களை பிரித்தெடுக்கும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்கி வருகிறது. இதனால் அரசாங்கத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திரண்டனர். அவர்கள் அங்குள்ள ஏ-12 நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைத்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 2 ஆயிரத்து 400 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்