தெலுங்கானாவில் மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம் - எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோவிற்கு தீ வைத்த ஓட்டுநர்

துணை முதல்-மந்திரியின் இல்லம் முன்பு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவிற்கு தீ வைத்தார்.;

Update:2024-02-02 21:50 IST

ஐதராபாத்,

தமிழகத்தைப் போல் தெலுங்கானா மாநிலத்திலும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனிடையே இந்த திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தெலுங்கானா மாநில துணை முதல்-மந்திரியின் இல்லம் முன்பு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தனது ஆட்டோவிற்கு தீ வைத்தார். இதில் அந்த ஆட்டோ முழுவதுமாக தீயில் எரிந்து நாசமானது. இதையடுத்து போலீசார் உடனடியாக அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் துணை முதல்-மந்திரி இல்லம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்