"பல நூற்றாண்டுகள் கனவு நிறைவேறியது" : ராமர் கோவில் நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடிக்கு மத்திய மந்திரிசபை பாராட்டு

மக்களின் நூற்றாண்டு கால கனவை பிரதமர் மோடி நனவாக்கி உள்ளார் என்று மத்திய மந்திரிசபையில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-01-24 22:02 GMT

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. தொடக்கத்தில், சக மந்திரிகள் சார்பில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஒரு தீர்மானத்தை வாசித்தார். அதில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு இருந்தது. தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:-

கடந்த 1947-ம் ஆண்டு இந்தியாவின் உடல்தான் சுதந்திரம் அடைந்தது. ஆனால், 2024-ம் ஆண்டு ஜனவரி 22-ந் தேதிதான், அதன் ஆன்மாவுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்களின் நூற்றாண்டு கால கனவை பிரதமர் மோடி நனவாக்கி உள்ளார். அவருக்கு பாராட்டுகள். மத்திய மந்திரிசபை வந்த பிறகு எத்தனையோ வரலாற்று சிறப்புமிக்க சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், பிரதமர் மூலம் நிறைவேற்றப்பட்ட பணி, வரலாற்றில் ஒப்பற்றது. எனவே, இந்த மந்திரிசபை கூட்டம் வரலாற்று சிறப்புமிக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், நிலக்கரியை வாயுவாக மாற்றும் திட்டங்களுக்கு ரூ.8 ஆயிரத்து 500 கோடி ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

Tags:    

மேலும் செய்திகள்