"கல்வி தந்தை என்ற அவரது மரபு எப்போதும் நினைவில் நிற்கும்" - காமராஜர் குறித்து ராகுல் காந்தி

காமராஜருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.;

Update:2024-07-15 17:45 IST

சென்னை,

காமராஜரின் 122 ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பாரத ரத்னா காமராஜரின் பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான அஞ்சலிகள்.

காமராஜர் உண்மையான தேசபக்தர் மற்றும் வெகுஜனத் தலைவர். அவர் அயராது உழைத்து நமது சமூகத்தின் நலிந்த பிரிவினரை உயர்த்துவது மூலம் மற்றவர்களை ஊக்கப்படுத்தினார். கல்வி தந்தை என்ற அவரது மரபு எப்போதும் நினைவில் நிற்கும்."

இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்