ஓராண்டுக்கு முன் இறந்த நபருக்கு கொரோனா தடுப்பூசிக்கான சான்றிதழ் கிடைத்த அவலம்

பீகாரில் ஓராண்டுக்கு முன்பே இறந்த நபர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி டோஸ் போட்டதற்கான சான்றிதழை அதிகாரிகள் அனுப்பியுள்ள அவலம் நடந்துள்ளது.

Update: 2022-09-17 17:09 GMT


பாட்னா,


பீகாரின் ஆர்வால் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ரமதார் மகதோ (வயது 68). கொரோனா 2-வது அலை பரவிய காலகட்டத்தில் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 7-ல் அவர் உயிரிழந்து விட்டார்.

இவரது மகன் அகிலேஷ் குமார். வார்டு உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், கடந்த 15-ந்தேதி அகிலேஷின் மொபைல் போனுக்கு தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், அகிலேஷின் தந்தைக்கு கொரோனா தடுப்பூசி 2-வது டோஸ் போடப்பட்டு விட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை பார்த்து, அவரது குடும்பத்தினர் ஆச்சரியம் அடைந்தனர். இதுபற்றி அகிலேஷ் கூறும்போது, கொரோனா தடுப்பூசியை சுகாதார அதிகாரிகள் கள்ள சந்தையில் விற்றிருக்க கூடும் என்ற சந்தேகம் எழுகிறது.

ஓராண்டுக்கு முன்பே இறந்தவர் பெயருக்கு தடுப்பூசி போட்ட செயதி வருவது பல கேள்விகளை எழுப்புகிறது. இதுபற்றி மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என அவர் கூறியுள்ளார். இதனை தீர விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்