கோவில் நில முறைகேடு விவகாரம்: கிரிமினல் வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

கோவில் நில முறைகேட்டில் கிரிமினல் வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-10-31 18:45 GMT

பெங்களூரு:

கோவில் நில முறைகேட்டில் கிரிமினல் வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

போலி நிலம் தயாரித்து....

பெங்களூரு சஞ்சய்நகர் அருகே வசித்து வருபவர் லதா. இவரது கணவர் மற்றும் சஞ்சய்நகரில் வசித்து வந்த அஸ்வதம்மா, சீனிவாஸ் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு கோவிலை கட்டி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு அஸ்வதம்மா உயிரிழந்தார். இந்த நிலையில் சீனிவாஸ், கோவிலின் நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து நிலத்தை தனது மனைவி சுரக்‌ஷா மற்றும் மகன் பெயருக்கு மாற்றியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து லதா அளித்த புகாரின்பேரில் சஞ்சய்நகர் போலீசார் சீனிவாஸ், சுரக்‌ஷா மீது மோசடி வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே கோவில் நில விவகாரம் தொடர்பாக லதாவையும், அவரது மகன் சேத்தன்குமாரையும் சீனிவாஸ், சுரக்‌ஷா ஆகியோர் மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

மனு தள்ளுபடி

இதுகுறித்த புகாரின்பேரில் சீனிவாஸ், சுரக்‌ஷா மீது சஞ்சய்நகர் போலீசார் கிரிமினல் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் கோவில் நில வழக்கு தொடர்பாக தங்கள் மீது சிவில் வழக்கு நடந்து வருவதால், அதே விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் சீனிவாஸ், சுரக்‌ஷா மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ், 2 வழக்குகளும் விசாரிக்கப்பட வேண்டியவை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்