காஷ்மீரில் நிலச்சரிவு; ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சோகம்

நிலச்சரிவில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த 2 மாத பெண் குழந்தை, அதன் தாய் மற்றும் 2 குழந்தைகள் என 4 பேர் சிக்கி கொண்டனர்.

Update: 2024-03-03 09:29 GMT

ரியாசி,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் மித முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் மகூர் துணை மண்டலத்திற்கு உட்பட்ட சஸ்ஸனா கிராமத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது.

கனமழையால் இன்று காலை அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் அந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்த 2 மாத பெண் குழந்தை, அதன் தாய் மற்றும் 2 குழந்தைகள் என 4 பேர் சிக்கி கொண்டனர்.

அவர்களை மீட்க வழியில்லாத சூழலில், அனைவரும் உயிரிழந்து விட்டனர். அவர்கள், முகமது பாரீத் என்பவரின் மனைவியான பல்லா அக்தர் (வயது 30), அவர்களின் மகள்களான நசீமா அக்தர் (வயது 5), சபீன் கவுசர் (வயது 3) மற்றும் 2 மாத குழந்தையான சம்ரீன் கவுசர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இதுதவிர, ஜுமா என்பவரின் மகனான காலு மற்றும் காலுவின் மனைவி பானு பேகம் (வயது 58) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்