தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி அறிவித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்

சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து உள்ளது.

Update: 2023-11-24 19:38 GMT

கோப்புப்படம் 

ஐதராபாத்,

தெலங்கானா மாநிலத்தில் வருகிற 30-ந்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து உள்ளது. அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு;

*மாதந்தோறும் மகளிருக்கு ரூ.2,500 வழங்கப்படும்

* பெண்களுக்கு இலவச பேருந்து வசதி

* ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்

* முதியோர்களுக்கு மாதம் ரூ. 4 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்

*ரூ.500-க்கு சமையல் எரிவாயு வழங்கப்படும்

*ஆண்டுதோறும் விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் திட்டம்

*யுவ விகாசம் திட்டத்தின் கீழ் மாணவர்களின் கல்விக்காக ரூ.5 லட்சம் மதிப்பிலான வித்யா பரோசா அட்டை வழங்கப்படும்.

 

Tags:    

மேலும் செய்திகள்