மராட்டிய மாநில செயலகத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்த நபர் - பாதுகாப்பு வலையால் உயிர் தப்பினார்..!

மராட்டிய மாநில செயலகத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்த நபர் கீழே இருந்த பாதுகாப்பு வலையால் உயிர் தப்பினார்.;

Update:2022-11-17 20:01 IST

மும்பை,

தெற்கு மும்பையில் உள்ள மராட்டிய அரசாங்கத்தின் தலைமையகமான மந்த்ராலயாவின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாபு மொகாஷி (வயது 43) என்ற நபர் இன்று மாலை 3 மணியளவில் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்தார். அதிர்ஷ்டவசமாக கீழே இருந்த பாதுகாப்பு வலையில் விழுந்து உயிர் தப்பினார்.

கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததையடுத்து அதை தடுக்கும் வகையில் அங்கு பாதுகாப்பு வலை நிறுவப்பட்டது. வலையில் சிக்கியிருந்த மொகாஷியை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை.

இது குறித்து மரைன் டிரைவ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்