மும்பை: வெளிநாட்டு பயணி கடத்திய ரூ.15 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

77 கேப்சூல்களில் அடைத்து வைக்கப்பட்ட, 1,468 கிராம் எடை கொண்ட போதை பொருளை அவர் இந்தியாவுக்கு கடத்தி வந்திருக்கிறார்.

Update: 2024-05-09 18:12 GMT

மும்பை,

மராட்டியத்தில் உள்ள மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை மேற்கொண்டனர். இதில், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஐவரிகோஸ்ட் நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

அவரிடம் இருந்த பொருட்களை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், கொக்கைன் என்ற போதை பொருளை அவர் கடத்தி வந்துள்ளது தெரிய வந்தது.

77 கேப்சூல்களில் அடைத்து வைக்கப்பட்ட, 1,468 கிராம் எடை கொண்ட போதை பொருளை அவர் இந்தியாவுக்கு கடத்தி வந்திருக்கிறார். அவற்றின் மதிப்பு ரூ.15 கோடி என கூறப்படுகிறது. அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர், போதை பொருள் அடங்கிய கேப்சூல்களை விழுங்கி, உடலில் மறைத்து வைத்தபடி இந்தியாவுக்கு கடத்தி கொண்டு வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, சர் ஜே.ஜே. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று வரை 3 நாட்களுக்கு சிகிச்சை தொடர்ந்தது. அவரிடம் இருந்த போதை பொருளை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கு பின்னணியில் பெரிய கடத்தல் கும்பல் செயல்படுகிறதா? என்ற நோக்கத்தில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்