மும்பை: பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 33 பெண்கள் மீட்பு
மும்பையில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 33 பெண்களை போலீசார் மீட்டுள்ளனர்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் தெற்கு மும்பையின் கிர்ஹன் பகுதியில் பாலியல் தொழில் நடபதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கிர்ஹன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பாலியல் தொழில் நடப்பதும், 30-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளபட்டதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளப்பட்ட 33 பெண்களை மீட்ட போலீசார், இடைத்தரகர்கள், வாடிக்கையாளர்கள் என 23 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.