9 ஆண்டுகளில் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் இல்லை, எல்லாம் கட்டாய விமர்சனங்கள் - பிரதமர் மோடி

கடந்த 9 ஆண்டுகளில், ஊழலில் இருந்து இந்தியா விடுபட்டுள்ளது.

Update: 2023-02-08 12:26 GMT

புதுடெல்லி,

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். மக்களவையில் பிரதமர் மோடி கூறியதாவது:-

ஒவ்வொருவரும் தங்களுடைய குணநலனுக்கு ஏற்றவாறு உரையாற்றினர். சிலர் பேசியதை கூர்ந்து கேட்ட போது அவர்களுக்கு திறனும், புரிதலும் குறைவாக இருப்பது தெரிய வருகிறது.

இல்லாத விஷயத்தை குறிப்பிட்டு மக்களவையில் ராகுல்காந்தி நையாண்டி செய்கிறார். காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்ற குழுத்தலைவரை அவமானம் செய்தார். ராகுல்காந்தி பேசும் போது அவை கொதிப்புடன் காணப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சு,அவர்களின் தரத்தை காட்டுகிறது.

ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்குப் பதிலாக, கடந்த 9 ஆண்டுகளில் கட்டாய விமர்சனங்கள் தான் வருகின்றன. நேற்று கூட ஒருவர் ஹார்வர்ட் படிப்பைப் பற்றிக் குறிப்பிடுவதைக் கேட்டேன், ஆனால் அவர்கள் அங்கு என்ன ஆய்வு செய்கிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். காங்கிரஸ் கட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் குறித்து ஆய்வு செய்கிறார்கள். வருங்காலத்தில் காங்கிரசின் வீழ்ச்சி குறித்து உலக பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்யும்.

2004 முதல் 2014 வரை இந்தியாவில் ஊழல் அதிக அளவில் இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில், ஊழலில் இருந்து இந்தியா விடுபட்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் இந்தியா வரலாறு படைக்கும். பத்தாண்டுகளுக்கு முன்பு விலைவாசி உயர்வு இரட்டை இலக்கத்தில் இருந்தது. தற்போது சிறப்பாக இருப்பதால் சிலரால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்