பாகிஸ்தான் ஆதரவு பாடலை ஒலிபரப்பிய சலூன் கடைக்காரர்.. அடுத்து நடந்த சம்பவம்

சலூனில் `காஷ்மீர் பனேகா பாகிஸ்தான்' என்ற பாகிஸ்தான் ஆதரவு பாடல் ஒலித்ததாக கூறப்படுகிறது.;

Update:2026-01-04 03:59 IST

மும்பை,

மும்பையை அடுத்த வசாய் சின்சோட்டி பகுதியில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் ஷா (வயது25) என்ற வாலிபர் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது சலூனில் `காஷ்மீர் பனேகா பாகிஸ்தான்' என்ற பாகிஸ்தான் ஆதரவு பாடல் ஒலித்தது. இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அப்துல் ரகுமான் ஷாவிடம் விசாரித்தனர்.

அப்போது அவர் தெரியாமல் யூ-டியூப்பில் பாகிஸ்தான் ஆதரவு பாடலை போட்டதாக தெரிவித்தார். எனினும் ஏற்கனவே இதுபோன்ற பாடலை அவர் ஒலிபரப்பியதாகவும், தங்களது எச்சரிக்கையை மீறி மீண்டும் அவர் அதே செயலில் ஈடுபட்டதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து தேசத்துக்கு எதிரான பாடலை ஒலிபரப்பியதாக கூறி சலூன் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

அப்துல் ரகுமான் ஷாவின் செயல் வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பதையும், கடந்த காலங்களில் அவர் இதே போன்ற பாடல்களைப் பாடியிருக்கிறாரா என்பதையும் கண்டறிய விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்